Know about Subramanya Bharathi!
Home > தேசிய கீதங்கள் > சுதந்திரப் பள்ளு
சுதந்திரப் பள்ளு
(பள்ளர் களியாட்டம்)
ராகம் - வராளி தாளம் - ஆதி
பல்லவி
ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடு)
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு)
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு)
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம். (ஆடு)
நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)
Wednesday, January 13, 2010
 | 
Labels:
சுதந்திரம்
,
தேசிய கீதங்கள்
 | 
 
 
Subscribe to:
Post Comments (Atom)
![]()  | 
பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.  | 
![]()  | |
| நன்றி:http://singgingg.blogspot.com | |
பாரதி பிரியர்கள்..
- ♫ இசையோடு..
 - Translated
 - கண்ணன் பாட்டு
 - குயில் பாட்டு
 - சுதந்திரம்
 - ஞானப் பாடல்கள்
 - தமிழ் நாடு
 - தனிப் பாடல்கள்
 - தெய்வப் பாடல்கள்
 - தேசிய இயக்கப் பாடல்கள்
 - தேசிய கீதங்கள்
 - தோத்திரப் பாடல்கள்
 - பலவகைப் பாடல்கள்
 - பாரத நாடு
 - பாரதி குறித்து..
 - பாரதி வாழ்க்கை
 - புதிய பாடல்கள்
 - பொருளடக்கம்
 - முப்பெரும் பாடல்கள்
 - வாழ்க்கை குறிப்பு
 
Know about Bharathi...
பாரதி படித்தோர் எண்ணிக்கை:
| பாரதி பிரியர்கள் கூறியவை... |  
 | 

- 
			
			தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading - 
			
			நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! TranslatedContinue Reading - 
			
			கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..Continue Reading 






1 comments:
this blog is really useful, i feel this should be made exhaustive and also should include all translations.. can be made more user friendly... kindly let me know at madhoonarayanan@gmail.com if you need any help with transliteration ....
Post a Comment