Know about Subramanya Bharathi!
Home > தெய்வப் பாடல்கள் > 7. காலனுக்கு உரைத்தல்
7. காலனுக்கு உரைத்தல்
ராகம் சக்கரவாகம் : தாளம்-ஆதி
பல்லவி
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் - அட (காலா)
சரணங்கள்
1.வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் - நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கிறேன் - ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே - நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட, மூடனே? அட (காலா)
2.ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன் - தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன் - இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்! உனைவிதிக்கிறேன் - ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன் - அட (காலா)
Wednesday, March 25, 2009
|
Labels:
ஞானப் பாடல்கள்
,
தெய்வப் பாடல்கள்
|
Subscribe to:
Post Comments (Atom)
பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன. |
|
நன்றி:http://singgingg.blogspot.com |
பாரதி பிரியர்கள்..
- ♫ இசையோடு..
- Translated
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- சுதந்திரம்
- ஞானப் பாடல்கள்
- தமிழ் நாடு
- தனிப் பாடல்கள்
- தெய்வப் பாடல்கள்
- தேசிய இயக்கப் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
- தோத்திரப் பாடல்கள்
- பலவகைப் பாடல்கள்
- பாரத நாடு
- பாரதி குறித்து..
- பாரதி வாழ்க்கை
- புதிய பாடல்கள்
- பொருளடக்கம்
- முப்பெரும் பாடல்கள்
- வாழ்க்கை குறிப்பு
Know about Bharathi...
பாரதி படித்தோர் எண்ணிக்கை:
பாரதி பிரியர்கள் கூறியவை... |
-
தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading -
நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! Translated
Continue Reading -
கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..
Continue Reading
1 comments:
Migavum poruthamana padam
Post a Comment