பாரதி அறுபத்தாறு
கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா! யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்; மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள் மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி; தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும் செய்யமணித் தாமரை நேர் முகத்தாள் காதல் வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும் வண்டினைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள். 1 தீராத காலமெலாம் தானும் நிற்பாள் தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி, நீராகக் கனலாக வானாக் காற்றா நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது போராக நோயாக மரண மாகப் போந்திதனை யழித்திடுவாள்;புணர்ச்சி கொண்டால் நேராக மோனமகா னந்த வாழ்வை நிலத்தின்மிசை அளித் தமரத் தன்மை ஈவாள். 2 மாகாளி பராசக்தி உமையாள் அன்னை வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி. பாகார்ந்த தேமொழியாள்,படருஞ் செந்தீ பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி ஆகார மளித்திடுவாள்,அறிவு தந்தாள் ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை. சோகா டவிக்குளெனைப் புகவொட்டாமல் துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள். 3 மரணத்தை வெல்லும் வழி பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்: முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார், முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்; அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ ? முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம் முடிந்திட்டார்,மடிந்திட்டார்,மண்ணாய் விட்டார். 4 பொந்திலே யுள்ளாராம்,வனத்தில் எங்கோ புதர்களிலே யிருப்பாராம்,பொதிகை மீதே சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம், நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனென் றில்லை; நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்! அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்; அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்! 5 சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான், தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான், பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்; பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்! மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான், மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே, நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்! நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை.6 அசுரர்களின் பெயர் அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்; மிச்சத்தைப் பின் சொல்வேன்,சினத்தை முன்னே வென்றிடுவீர்,மேதினியில் மரணமில்லை; துக்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே, சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும் நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே. நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில். 7 சினத்தின் கேடு சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவா ரொப்பாவார்;சினங்கொள் வார்தாம் மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம். தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார், சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச் செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார். 8 மாகாளி பராசக்தி துணையே வேண்டும். வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா; சாகா மலிருப்பதுநம் சதுரா லன்று; சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்; பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன். பாரீர்நீர் கேளீரோ,படைத்தோன் காப்பான்; வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர் மேதினியி லேதுவந்தால் எமக்கென் னென்றே. 9 தேம்பாமை ''வடகோடிங் குயர்ந்தென்னே,சாய்ந்தா லென்னே, வான் பிறைக்குத் தென்கோடு''பார்மீ திங்கே விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால், வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே? திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா; தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்! 10 பொறுமையின் பெருமை திருத்தணிகை மலைமேலே குமார தேவன் திருக்கொலுவீற் றிருக்குமதன் பொருளைக் கேளீர்! திருத்தணிகை யென் பதிங்கு பொறுமை யின்பேர். செந்தமிழ்கண் டீர்,பகுதி'தணி'யெ னுஞ்சொல், பொறுத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும், 'பொறுத்தவரே பூமியினை ஆள்வார்'என்னும் அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம். அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்! 11 பொறுமையினை,அறக்கடவுள் புதல்வ னென்னும் யுதிட்டிரனும் நெடுநாளிப் புவிமேல் காத்தான். இறுதியிலே பொறுமைநெறி தவறி விட்டான் ஆதலாற் போர்புரிந்தான் இளையாரோடே; பொறுமை யின்றிப் போர்செய்து பரத நாட்டைப் போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது வறுமையையுங் கலியினையும் நிறுத்தி விட்டு மலைமீது சென்றான்பின் வானஞ் சென்றான் 12 ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம் அநியாய் மரணமெய்தல் கொடுமை யன்றொ? தேனான உயிரைவிட்டுச் சாக லாமோ? செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்; கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு கூறு கின்றான்; (ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!) ''நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்''என்றான்.13 கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்! கொடுங்கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம் ஆபத்தாம்,அதிர்ச்சியிலே சிறிய தாகும்; அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்; தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்; கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்; கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான் கொல்வதர்கு வழியெனநான் குறித்திட்டேனே. 14 கடவுள் எங்கே இருக்கிறார்? ''சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே? சொல்'' லென்று ஹைரணியந்தான் உறுமிக் கேட்க, நல்லதொரு மகன் சொல்வான்:-'தூணி லுள்ளான் நாரா யணந்துரும்பி லுள்ளான்'என்றான். வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை. மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை; அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை; அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ ? 15 சுயசரிதை கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக் ''கீழான்''பன்றியினைத் தேளைக் கண்டு தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச் சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்; கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்; கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம். மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்; விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே. 16 சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்; சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்; வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர், வித்தை யிலாப் புலையனு மஃதென்னும் வேதம்; பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும் நித்தநும தருகினிலே குழந்தை யென்றும் நிற்பனவுந் தெய்வமன்றொ நிகழ்த்து வீரே? 17 உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் ரில்லை; ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்; பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப் பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்; வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம் மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்; எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்! 18 குருக்கள் துதி(குள்ளச்சாமி புகழ்) ஞான்குரு தேசிகனைப் போற்று கின்றேன்; நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்; மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோ ம்; தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச் சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான். வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும் வகையுணர்த்திக் காத்த பிரான் பதங்கள் போற்றி!19 எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே! எம்பெருமான் சிதம்பரதே சிகந்தாள் எண்ணாய்! முப்பொழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான், முத்தியெனும் வானகத்தே பரிதி யாவான், தப்பாத சாந்தநிலை அளித்த கோமான், தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன், குப்பாய ஞானத்தால் மரண மென்ற குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்! 20 தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்; பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்; நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்; ஞானகங்கை தனைமுடிமீ தேந்தி நின்றான்; ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான், ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே. 21 வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா; வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை; ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ? ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ? ஆயிரனூல் எழுதிடினும் முடிவ்ய் றாதாம்; ஐயனவன் பெருமையைநான் சுருக்கிச் சொல்வேன்; காயகற்பஞ் செய்துவிட்டான்;அவன்வாழ் நாளைக் மணக்கிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை. 22 குரு தரிசனம் அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி அடைக் கலஞ்சேர் ஈசுவரன் தர்மராஜா என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில், இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான், முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி என்றனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண் இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி. 23 அப்போது நான்குள்ளச் சாமி கையை அன்புடனே பற்றியது பேச லுர்றேன்: ''அப்பனே!தேசிகனே!ஞானி என்பார் அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்; செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய், உத்தமனே!எனக்குநினை உணர்த்து வாயே. 24 யாவன் நீ? நினைக்குள்ள திறமை என்னே? யாதுணர்வாய் கந்தைசுற்றித் திரிவ தென்னே? தேவனைப்போல் விழிப்ப தென்னே? சிறியாரோடும் தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே? பாவனையிற் பித்தரைப்போல் அலைவ தென்னே? பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே? ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம், ஆரியனே,அனக்குணர்த்த வேண்டும்''என்றேன். 25 பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி பரிந்தோடப் பார்த் தான்;யான் விடவே யில்லை, சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்; தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்; குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்; மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று வாவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.26 உபதேசம் பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரம யோகி ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி, [என்றேன் ''அறிதிகொலோ!''எனக்கேட்டான்''அறிந்தேன்'' மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்;யானும் வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன். 27 தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்; ''வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி, மண்போலே சுவர்போலே,வாழ்தல் வேண்டும்; தேசுடைய பரிதியுருக் கிணற்றி நுள்ள் தெரிவதுபோல் உனக்குள்ள் சிவனைக் காண்பாய்; பேசுவதில் பயனில்லை.அனுப வத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம்''என்றான். 28 கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன், கருத்தையதில் காட்டுவேன்;வானைக் காட்டி மையிலகு விழியாளின் காத லொன்றே வையகத்தில் வாழுநெறி யென்றுகாட்டி, ஐயனெனக் குணார்த்தியன பலவாம் ஞானம், அகற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும். பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன் பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே. 29 மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை வளமுறவே கட்டியவன் முதுகின் மீது கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக் கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்; சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்; ''தம்பிரா னே; இந்தத் தகைமை என்னே? முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றொ? மூட்டைசுமந் திடுவதென்னே?மொழிவாய்''அன்றென்.30 புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்; ''புறததேநான் சுமக்கின்றேன்;அகத்தி னுள்ளே; இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ" என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான். மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்; மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே, இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும். 31 சென்றதினி மீளாது;மூடரே,நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா; இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும். 32 மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ! மேதையில்லா மானுடரே!மேலும் மேலும் மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர். ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே! மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். 33 சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா; 'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ? நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்; நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்' என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக் குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். 34 குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச் செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத் தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர், அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய். 35 கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம் கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும் நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்; தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான் துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே; வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும் மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க! 36 கோவிந்த சுவாமி புகழ் மாங்கொட்டைச் சாமி புகழ் சிறிது சொன்னோம்; வண்மை திகழ் கோவிந்த ஞானி,பார்மேல் யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்; எம்பெருமான் பெருமையையிங் கிசைக்கக் கேளீர்! தீங்கற்ற குணமுடையான் புதுவை யூரார் செய்தபெருந் தவத்தாலே உதித்த தேவன் பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன். 37 அன்பினால் முத்தியென்றான் புத்தன் அந்நாள், அதனையிந்நாட் கோவிந்த சாமி செய்தான்; துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி; அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்; அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்; மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற மதியுடையான்,கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்;38 பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப் போந்தானிம் முனியொருநாள்;இறந்த எந்தை தன்னுருவங் காட்டினான்;பின்னர் என்னைத் தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்; அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத் தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்; மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்; மரணபயம் நீங்கினேன்;வலிமை பெற்றேன். 39 யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ் கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்; குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான், தேவிபதம் மறவாத தீர ஞானி, சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான், பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி, பரமபத வாயிலெனும் பார்வை யாளன்; காவிவளர் தடங்களிலே மீஙள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.40 தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம் சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும் துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்; தோழரே!எந்நாளும் எனக்குப் பார்மேல் மக்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச் சங்கரெனன் றெப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி. 41 குவளைக் கண்ணன் புகழ் யாழ்ப்பாணத் தையனையென் நிடங்கொ ணர்ந்தான் இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக் காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்,பார்மேல் கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான் பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன், பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான். தீர்ப்பான சுருதிவநி தன்னிற் சேர்ந்தான், சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார். 42 மகத்தான் முனிவரெலாம் கண்ணன் தோழர்; வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்; மிகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின் வீரப்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான். ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்துச் சமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான் அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்; ''அன்றேயப் போதேவீ டதுவே வீடு'' 43 பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோ ம், பாரினிலே பயந்தெளிந்தோம்;பாச மற்றோம். நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்; நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம்,அப்பா! தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர், தாரணியில் பலருள்ளார்,தருக்கி வீழ்வார்; ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல் என்றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர். 44 பெண் விடுதலை பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி பிறப்பித்தேன்;அதற்குரிய பெற்றி கேளீர்; மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால், மனையாளும் தெய்வமன்றோ?மதிகெட்டீரே! விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர், விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர், பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால் பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை. 45 தாய் மாண்பு பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப் பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ? ''கண்டார்க்கு நகைப்'பென்னும் உலக வாழ்க்கை காதலெனும் கதையினுடைக் குழப்பமன்றோ? உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை உமையவளென் றறியீரோ?உணர்ச்சி கெட்டீர்! பண்டாய்ச்சி ஔவை ''அன்னையும் பிதாவும்,'' பாரிடை ''முன் னறிதெய்வம்''என்றா: அன்றோ?46 தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ ? தாய்பெண்ணே யல்லளோ?தமக்கை,தங்கை வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ? மனைவியொருத் தியையடிமைப் படுத்த வேண்டித் தாய்க்குலத்தை முழுதடிமைத் படுத்த லாமோ? ''தாயைப்போ லேபிள்ளை''என்று முன்னோர் வாக்குளதன் றோ?பெண்மை அடிமை யுற்றால் மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ? 47 வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம் வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்; நாட்டினிலே நாடோ றும் முயன்றிடுவான் நலிந்து சாவான்; காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம்,அப்பா! காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை; பாட்டினிலே காதலை நான் பாட வேண்டிப் பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே. 48 காதலின் புகழ் காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்; கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே! அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்; காதலினால் சாகாம லிருத்தல் கூடும்; கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம். 49 ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்; அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்; சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம் சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில் மாதவனும் ஏந்தினான்;வானோர்க் கேனும் மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ ? காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும். 50 கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக் கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்; மங்கைதனைக் காட்டினிலும் உடண்கொண் டேகி மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்; இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம் இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ? 51 நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்; ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்; பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்; பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே. 52 காதலிலே இன்பமெய்திக் களித்து நின்றால் கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ? மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ? பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப் பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ? 53 விடுதலைக் காதல் காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில்; மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்; பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே, பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால், வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார். 54 வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்! சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார். காரணந்தான் யாதெனிலோ;ஆண்க ளெல்லாம் களவின்பம் விரும்புகின்றார்;கற்பே மேலென்று ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள் எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே! 55 ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால், அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ? நாணற்ற வார்த்தையன்றோ?வீட்டைச் சுட்டால், நலமான் கூரையுந்தான் எரிந்தி டாதோ? பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்? காணுகின்ற காட்சியெலாம் மறைத்து வைத்துக் கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே! 56 சர்வ மத சமரசம் (கோவிந்த சுவாமியுடன் உரையாடல்) ''மீளவுமங் கொருபகலில் வந்தான் என்றன் மனையிடத்தே கோவிந்த வீர ஞானி, ஆளவந்தான் பூமியினை,அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன்,அன்பு வேந்தன் நாளைப்பார்த் தொளிர்தருநன் மலரைப்போலே நம்பிரான் வரவுகண்டு மனம் மலர்ந்தேன்; வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம், வெயிலுள்ள போதினிலே உலர்த்திக் கொள்வோம்.57 காற்றுள்ள போதேநாம் தூற்றிக் கொள்வோம்; கனமான குருவையெதிர் கண்டபோதே மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்; மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்; கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்; குலைவான மாயைதனை அடித்துக் கொள்வோம்; பேற்றாலே குருவந்தான்;இவன்பால் ஞானப் பேற்றையெல்லாம் பெறுவோம்யாம்''அன்றெனுள்ளே.58 சிந்தித்து ''மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே! தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம் வந்தித்து நினைக்கே டேன் கூறாய்''என்றேன். வானவனாம் கோவிந்த சாமி சொல்வான்; ''அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன் அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்; பந்தமில்லை;பந்தமில்லை;பந்தம் இல்லை; பயமில்லை;பயமில்லை;பயமே இல்லை; 59 ''அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்; அதுவென்றால் எதுவெனநான் அறையக் கேளாய்! அதுவென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்; அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்;நீயும் அதுவன்றிப் பிறிதில்லை;ஆத லாலே, அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல் மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய் சீடா! 60 'பாரான உடம்பினிலே மயிர்களைப்போல் பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கை யாலே; நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா; காரான நிலத்தைப்போய்த் திருத்தவேண்டா; கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா; சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு; சிவன் செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு.61 ''ஆதலால் மானிடர்கள் களவை விட்டால் அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்! பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப் பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு நீதமில்லாக் கள்வர்நெறி யாயிற் றப்பா! நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ? பாதமலர் காட்டினினை அன்னை காத்தாள்; பாரினிலித் தருமம்நீ பகரு வாயே. 62 ''ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும் ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம் ஒருமொழி 'ஓம் நமச் சிவாய' வென்பர்; 'ஹரிஹரி'யென் றிடினும் அஃதே;'ராம ராம' 'சிவசிவ'வென்றிட்டாலும் அஃதேயாகும். தெரிவுறவே 'ஓம்சக்தி'யென்று மேலோர் ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும். 63 ''சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்; சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்; ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார் எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்; வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்; எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்; பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும். 64 ''பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி! புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம், சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம், சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம், நாமமுயர் சீனத்துத் 'தாவு''மர்க்கம், நல்ல ''கண் பூசி''மதம் முதலாப் பார்மேல் யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே; யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே. 65 ''பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம் பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்: சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே; தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்; பூமியிலே நீகடவு ளில்லை யென்று புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை; சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச் சதாகாலம் 'சிவோஹ'மென்று சாதிப் பாயே!'' 66
Tuesday, February 23, 2010 | Labels: தெய்வப் பாடல்கள் , பலவகைப் பாடல்கள் | 4 Comments || Add comments and contribute
விநாயகர் நான்மணி மாலை
வெண்பா
(சக்திபெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்(திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா) - அத்தனே
(நின்)றனக்குக் காப்புரைப் பார், நின்மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்புநீ யே. 1
கலித்துறை
நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்,
வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. 2
விருத்தம்
செய்யுந் தொழிலே காண்
சீர்பெற் றிடநீ அருள்செய்வாய்,
வையந் தனையும் வெளியினையும்
வானத் தையுமுன் படைத்தவனே,
ஐயா, நான்முகப் பிரமாவே
யானை முகனே, வாணிதனைக்
கையா லணைத்துக் காப்பவனே,
கமலா சனத்துக் கற்பகமே 3
அகவல்
கற்பக விநாயகக் கடவுளே, போற்றி
சிற்பர மோனத் தேவன் வாழ்க
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க
படைப்புக் கிறையவன்; பண்ணவர் நாயகன்,
இந்திர குரு.எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்,
குணமதிற் பலவாம்; கூறக் கேளீர்
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்,
அக்கினி தோன்றும், ஆண்மை வலியுறும்?
திக்கெலாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்,
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்,
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்,
அச்சந் தீரும். அமுதம் விளையும்,
வித்தை வளரும், வேள்வி ஓங்கும்
அமரத் தன்மை எய்தவும்
இங்குநாம் பெறலாம், இ·துணர் வீரே 4
வெண்பா
(உண)ர்வீர் உணர்வீர் உலகத்தீர், இங்குப்
(புண)ர்வீர் அமர(ரு)ம் போக(ம்) - கண(ப)தியைப்
(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்
காதலுடன் கஞ்சமலர் கால்) 5
கலித்துறை
காலைப் பிடித்தேன் கணபதி, நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமென்னும் நாட்டின் நிறுத்த குறியெனக்கே. 6
விருத்தம்
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்திற் சலன மில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்,
கனக்குஞ் செல்வம் நூறுவயது,
இவையும் தர நீ கடவாயே. 7
அகவல்
கடமை யாவன, தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல்
விநாயகத் தேவனாய் வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய் நதிச்சடை முடியனாய்
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி,
அல்லா, யெஹோவா எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய், திருமகள், பாரதி.
உமையெனுத் தேவியர் உகந்தவான் பொருளாய்,
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்,
இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும்
கடமை யெனப்படும, பயனிதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே.
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்
மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா!
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,
அசையா நெஞ்சம் அருள்வாய், உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டி, நின் இருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்ட
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே. 8
வெண்பா
களியுற்று நின்று, கடவுளே! இங்குப்
பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய் - ஒளிபெற்றுக்
கல்விபல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல்வினைக்கட் டெல்லாம் துறந்து. 9
கலித்துறை
துறந்தார் திறமை பெரிததி னும்பெரி தாகுமிங்குக்
குறைந்தா ரைக்காத் தெளியார்க்குண வீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்கள்ம் நீடுழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே. 10
விருத்தம்
தவமே புரியும் வகையறியேன்,
சலியா துறநெஞ் சறியாது
சிவமே, நாடிப் பொழு தனைத்தும்
தியங்கித் தியங்கி நிற்பேனை,
நவமா மணிகள் புனைந்தமுடி
நாதா! கருணா லயனே! தத்
துவமாகி யதோர் பிரணவமே
அஞ்சேல் என்று சொல்லுதியே. 12
அகவல்
சொல்லினுக் கரியனாய் சூழ்ச்சிக் கரியனாய்ப்
பல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளை,
உள்ளுயி ராகி உலகங் காக்கும்
சக்தியே தானாந் தனிச்சுடர் பொருளை,
சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப்
பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,
ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியவனாய்,
யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய்
வாழ்ந்திட விரும்பினேன், மனமே! நீயிதை
ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பலமுறை
சூழ்ந்து, தெளிந்து பின் சூழ்ந்தார்க் கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து
தேறித் தேறிநான் சித்திபெற் றிடவே,
நின்னா லியன்ற துணைபுரி வாயேல்
பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன்;
மனமே! எனை நீ வாழ்வித் திடுவாய்!
வீணே யுழலுதல் வேண்டா,
சக்தி குமாரன் சரண்புகழ் வாயே 12
வெண்பா
புகழ்வோம் கணபதியின் பொற்கழலை நாளும்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே - இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம, ஈங்கிது காண்
வல்லபைகோன் தந்த வரம். 13
கலித்துறை
வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலைமை விருப்பமும் ஐயமும் காய்ந்தெறிந்து
சிரமீது எங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத்
தரமேகொல் வானவர் என்றுளத் தேகளி சார்ந்ததுவே 14
விருத்தம்
சார்ந்து நிற்பாய் எனதுளமே
சலமும் கரமும் சஞ்சலமும்
பேர்ந்து பரம சிவாநந்தப்
பேற்றை நாடி, நாள்தோறும்
ஆர்ந்த வேதப் பொருள்காட்டும்
ஐயன், சக்தி தலைப்பிள்ளை,
கூர்ந்த இடங்கள் போக்கிடுநங்
கோமான் பாதக் குளிர்நிழலே. 15
அகவல்.
நிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் றுணையாய்த்
தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து
மண்ணினும் காற்றினும் வானினும் எனக்குப்
பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான்
உள்ளத் தோங்க நோக்குறும் விழியும்,
மௌன வாயும், வரந்தரு கையும்,
உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான்,
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்
தானே யாகிய தனிமுதற் கடவுள்,
யானென தற்றார் ஞானமே தானய்
முக்தி நிலைக்கு மூலவித் தாவான்
சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்
ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை
வாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை,
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே. 16
வெண்பா.
முறையே நடப்பாய் முழுமூட நெஞ்சே!
இறையேனும் வாடாய் இனிமேல் - கறையுண்ட
கண்டன் மகன்வேத காரணன் சக்திமகன்
தொண்டருக் குண்டு துணை. 17
கலித்துறை
துணையே! எனதுயி ருள்ளே யிருந்து சுடர்விடுக்கும்
மணியே! எனதுயிர் மன்னவ னே!என்றன் வாழ்வினுக்கோர்
அணியே! எனுள்ளத்தி லார முதே! என தற்புதமே!
இணையே துனக்குரைப்பேன் கடைவானில் எழுஞ்சுடரே! 18
விருத்தம்
சுடரே போற்றி! கணத்தேவர்
துரையே போற்றி! எனக்கென்றும்
இடரே யின்றிக் காத்திடுவாய்.
எண்ணாயிரங்கால் முறையிட்டேன்,
படர்வான் வெளியிற் பலகோடி
கோடி கோடிப் பலகோடி
இடறா தோடும் அண்டங்கள்
இசைத்தாய், வாழி இறையவனே! 19
அகவல்
இறைவி இறைவன் இரண்டும்ஒன் றாகித்
தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்
உள்ளளி யாகி உலகெலாந் திகழும்
பரம்பொரு ளேயோ? பரம்பொரு ளேயோ?
ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்
தேவ தேவா! சிவனே கண்ணா!
வேலா! சாத்தா! விநாயகா! மாடா!
இருளா! சூரியா! இந்துவே! சக்தியே!
வாணீ! காளீ! மாமக ளேயோ!
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
வேதச் சுடரே! மெய்யாங் கடவுளே!
அபயம் அபயம் அபயம்நான் கேட்டேன்,
நோவு வேண்டேன் நூற்றாண்டு வேண்டினேன்,
அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன்,
உடைமை வேண்டேன் உன்துணை வேண்டினேன்,
வேண்டா தனைத்தையும் நீக்கி
வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே. 20
வெண்பா
கடமைதா னேது? கரிமுகனே! வையத்
திடம்நீ யருள்செய்தாய், எங்கள் - உடைமைகளும்
இன்பங் களுமெல்லாபம் ஈந்தாய் நீ யாங்களுனக் (கு)
என்புரிவோம் கைம்மா றியம்பு? 21
கலித்துறை
இயம்பு மொழிகள் புகழ்மறை யாகும், எடுத்தவினை
பயன்படும்; தேவர் இருபோதும் வந்து பதந்தருவர்
அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளே 22
விருத்தம்
மேன்மைப் படுவாய்! மனமே! கேள்
விண்ணின் இடிமுன் விழுந்தாலும்,
பான்மை தவறி நடுங்காதே,
பயத்தால் ஏதும் பயனில்லை,
யான்முன் உரைத்தேன் கோடிமுறை
இன்னுங் கோடி முறைசொல்வேன்,
ஆன்மா வான கணபதியின்
அருளுண்டு அச்சம் இல்லையே. 23
அகவல்
அச்ச மில்லை அமுங்குத லில்லை,
நடுங்குதலில்லை நாணுத லில்லை
பாவ மில்லை பதுங்குத லில்லை
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்,
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்,
யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்,
எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்,
வான முண்டு மாரி யுண்டு
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே,
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்,
கேட்கப் பாட்டும் காணநல் லுலகமும்
களித்துரை செய்யக் கணபதி பெயரும்
என்றுமிங் குளவாம்! சலித்திடாய், ஏழை
நெஞ்சே! வாழி! நேர்மை யுடன் வாழி!
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ!
தஞ்ச முண்டு சொன்னேன்,
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே. 24
வெண்பா
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கண நாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே! இம்மூன்றும் செய். 25
கலித்துறை
செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்,
வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெல்லாம்
ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே!
பையத் தொழில்புரி நெஞ்சே! கணாதிபன் பக்திகொண்டே! 26
விருத்தம்
பக்தி யுடையார் காரியத்திற்
பதறார்! மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல்
மெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே அனைத்துமெனிற்
சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
விந்தைக் கிறைவா! கணநாதா!
மேன்மைத் தொழிலிற் பணியெனையே! 27
அகவல்
எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தா ரன்றே பூமி யாள்வார்?
யாவும் நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல்
செவ்விய நெறி, அதிற் சிவநிலை பெறலாம்,
பொங்குதல் போக்கிற் பொறையெனக் கீவாய்
மங்கள குணபதி, மணக்குள கணபதி!
நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்,
அகல்விழி உமையாள் ஆசைமகனே!
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்,
உளமெனும் நாட்டை ஒருபிழை யின்றி
ஆள்வதும், பேரொளி ஞாயிறே யனைய
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன்.
காத்தருள் புரிக கற்பக விநாயகா!
காத்தருள் புரிக கடவுளே! உலகெலாம்
கோத்தருள் புரிந்த குறிப்பரும் பொருளே!
அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்
எங்குல தேவா போற்றி!
சங்கரன் மகனே! தாளிணை போற்றி! 28
வெண்பா
போற்றி! கலி யாணிபுதல்வனே! பாட்டினிலே
ஆற்ற லருளி அடியேனைத் - தேற்றமுடன்
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்! வாணியருள்
வீணையொலி என்நாவில் விண்டு. 29
கலித்துறை
விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே!
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்!
பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்தசுவைத்
தெண்டமிழ்ப்பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே. 30
விருத்தம்
செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி
செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்,
கையா ளெனநின் றடியேன்செய்
தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள் புகழ்சேர் வாணியுமென்
னுள்ளே நின்று தீங் கவிதை
பெய்வாள்! சக்தி துணைபுரிவாள்
பிள்ளாய்! நின்னைப் பேசிடிலே. 31
பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்,
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்.
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு, மரங்கள்,
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,
இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந்த் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
'பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும் நோவும்,
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க', என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய் ஐயனே
இந்நாள் இப்பொழுது தெனக்கிவ் வரத்தினை
அருள்வாய்; ஆதிமூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே. 32
வெண்பா
உனக்கேஎன் ஆவியும் உள்ளமும் தந்தேன்,
மனக்கேதம் யாவினையும் மாற்றி- (எனக்கே நீ)
நீண்டபுகழ் வாணாள் நிறைச் செல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து. 33
கலித்துறை
விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா!
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன்
அரங்கத் திலேடிரு மாதுடன் பள்ளிகொண் டான் மருகா!
வரங்கள் பொழியும் முகிலே, என்னுளத்து வாழ்பவனே! 34
விருத்தம்
வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத மணிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமிலாது!
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க! துயர்கள் தொலைந்திடுக!
தொலையா (இன்பம் விளைந்திடுக!)
வீழ்க கலியின் வலியெல்லாம்
கிருத யுகந்தான் மேவுகவே. 35
அகவல்
மேவி மேவித் துயரில் வீழ்வாய்.
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்.
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன், எதற்குமினி அஞ்சேல்,
ஐயன் பிள்ளை (யார்) அருளால் உனக்குநான்
அபயமிங் களித்தேன்.... நெஞ்(சே)
நினக்குநான் உரைத்தன நிலை நிறுத்தி(டவே)
தீயிடைங் குதிப்பேன் கடலுள் வீழ்வேன்,
வெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன்.
ஏதுஞ் செய்துனை இடரின்றிக் காப்பேன்
மூட நெஞ்சே முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன, இன்னும் மொழிவேன்,
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே,
எது நிகழினும் நமக்கென்? என்றிரு,
பராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும்
நமக்கேன் பொறுப்பு? 'நான் என்றோர் தனிப்பொருள்
இல்லை, நானெனும் எண்ணமே வெறும்பொய்'
என்றான் புத்தன் இறைஞ்சுவோம் அவன்பதம்
இனியெப் பொழுதும் உரைத்திடேன், இதை நீ
மறவாதிருப்பாய், மடமை நெஞ்சே!
கவலைப் படுதலே கருநரகு அம்மா!
கவலையற் றிருத்தலே முக்தி,
சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே. 36
வெண்பா.
செய்கதவம்! செய்கதவம்! நெஞ்சே! தவம்செய்தால்,
எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை. அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு. 37
கலித்துறை.
இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதென்றாம்.
செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும், சீர்மிகவே
பயிலு நல்லன்பை இயல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்
முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே. 38
விருத்தம்
மொய்க்குங் கவலைப் பகைபோக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி,
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
உடலை இரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விதியி·தே. 39
அகவல்
விதியே வாழி! விநாயகா வாழி!
பதியே வாழி! பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே, போற்றி!
இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கு
மூல சக்தியின் முதல்வா போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி!
காலம் மூன்றையும் கடந்தான் வாழி!
சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி! வீரம் வாழி!
பக்தி வாழி! பலபல காலமும்
உண்மை வாழி, ஊக்கம் வாழி!
நல்ல குணங்களை நம்மிடை யமரர்
பதங்களாம், கண்டீர்! பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன், வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே! 40
Friday, January 15, 2010 | Labels: தெய்வப் பாடல்கள் , தோத்திரப் பாடல்கள் | 0 Comments || Add comments and contribute
11. பரசிவ வெள்ளம்
ஞானப் பாடல்கள்
பரசிவ வெள்ளம்
உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே.
1
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே.
2
எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர் என்றும்மய லெய்துவதாய்,
3
வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்,
4
தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி,
5
தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.
6
எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே.
7
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே.
8
காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.
9
எல்லாந் தானாகி யிரிந்திடினும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.
10
மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனைத்துங் கண்டாரே.
11
இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்;
எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே.
12
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.
13
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.
14
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா !
15
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா !
16
எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா !
17
எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா !
18
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா !
19
காவித் துணிவேண்டா, காற்றைச் சடைவேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே
20
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங்க ளில்லையுள ந்தொட்டுநின்றாற்போதுமடா !
21
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா !
சிவமொன்றேயுள்ளதெனச்சிந்தைசெய்தாற்போதுமடா !
22
சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின்றசிவம்,
வந்தெனுளே பாயுதென்றுவாய்சொன்னாற் போதுமடா !
23
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா !
24
Saturday, May 02, 2009 | Labels: ஞானப் பாடல்கள் , தெய்வப் பாடல்கள் | 1 Comments || Add comments and contribute
10. அறிவே தெய்வம்

ஞானப் பாடல்கள்
அறிவே தெய்வம்
கண்ணிகள்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் ! - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ ?
1
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் ! - எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ ?
2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ ? - பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ ?
3
வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.
4
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.
5
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே - உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.
6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம் - நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ ?
7
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ ?
8
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ ?
9
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.
10
Friday, May 01, 2009 | Labels: ஞானப் பாடல்கள் , தெய்வப் பாடல்கள் | 1 Comments || Add comments and contribute
9. சங்கு
ஞானப் பாடல்கள்
சங்கு
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம் !
1
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூய ராமென்றிங் கூதேடா சங்கம் !
2
பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம் !
3
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம் !
4
Thursday, April 30, 2009 | Labels: ஞானப் பாடல்கள் , தெய்வப் பாடல்கள் | 0 Comments || Add comments and contribute
8. மாயையைப் பழித்தல்

ஞானப் பாடல்கள்
மாயையைப் பழித்தல்
ராகம் : காம்போதி - தாளம் : ஆதி
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?
மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ ! - மாயையே !
1
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!
2
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் - மாயையே !
3
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே ! - இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய் ! - மாயையே !
4
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப
மாயையே ! - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ ? - மாயையே !
5
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே !
6
என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே ! - இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண் - மாயையே !
7
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே !
8
Wednesday, April 29, 2009 | Labels: ஞானப் பாடல்கள் , தெய்வப் பாடல்கள் | 1 Comments || Add comments and contribute
6. ஆத்ம ஜயம்

ஞானப் பாடல்கள்
ஆத்ம ஜயம்
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ?-அட,
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ?-அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு ப்ராசக்தியே!
1
என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?
2
Tuesday, April 28, 2009 | Labels: ஞானப் பாடல்கள் , தெய்வப் பாடல்கள் | 3 Comments || Add comments and contribute
5. மனத்தில் உறுதி வேண்டும்

ஞானப் பாடல்கள்
மனத்தில் உறுதி வேண்டும்
மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.
Monday, April 27, 2009 | Labels: ஞானப் பாடல்கள் , தெய்வப் பாடல்கள் | 0 Comments || Add comments and contribute
4. விடுதலை வேண்டும்

தெய்வப் பாடல்கள்
ஞானப் பாடல்கள்
விடுதலை வேண்டும்
ராகம் - நாட்டை
பல்லவிவேண்டுமடி எப்போதும் விடுதலை,அம்மா;
சரணங்கள்
1. தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ
(வேண்டுமடி)
2. விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்ம்மை தீர, மெய்ம்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும் வண்மை பொழிய
(வேண்டுமடி)
3. பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள.
(வேண்டுமடி)
Sunday, April 26, 2009 | Labels: ஞானப் பாடல்கள் , தெய்வப் பாடல்கள் | 0 Comments || Add comments and contribute
3. சிட்டுக் குருவியைப் போலே

தெய்வப் பாடல்கள்
ஞானப் பாடல்கள்
விடுதலை-சிட்டுக்குருவி
பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
சரணங்கள்
1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு.
(விட்டு)
2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு.
(விட்டு)
3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.
(விட்டு)
Saturday, April 25, 2009 | Labels: ஞானப் பாடல்கள் , தெய்வப் பாடல்கள் | 0 Comments || Add comments and contribute
2. ஐய பேரிகை

ஞானப் பாடல்கள்
2. ஐய பேரிகை
ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய பேரிகை கொட்டடா!
1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்
(ஐயபேரிகை)
2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்.
(ஐயபேரிகை)
3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.
(ஐயபேரிகை)
Friday, April 24, 2009 | Labels: ஞானப் பாடல்கள் , தெய்வப் பாடல்கள் | 0 Comments || Add comments and contribute
1. அச்சமில்லை
தெய்வப் பாடல்கள்
ஞானப்பாடல்கள்
1. அச்சமில்லை
பண்டாரப் பாட்டுஉச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
1
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
2
Thursday, April 23, 2009 | Labels: ஞானப் பாடல்கள் , தெய்வப் பாடல்கள் | 0 Comments || Add comments and contribute
கண்ணமாவின் காதல் - காற்று வெளியிடைக் கண்ணமா
![]() |
காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்
1. காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)
2. நீயென தின்னுயிர் கண்ணம்மா ! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் - நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே ! - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
Bharathi's "Katru Vili idai…" is translated into following languages. You may not get exact feel as this is done by Google translation tool. Feel free to give correct translation. Now, Enjoy ! |
|
Wednesday, April 15, 2009 | Labels: ♫ இசையோடு.. , Translated , தெய்வப் பாடல்கள் , தோத்திரப் பாடல்கள் | 4 Comments || Add comments and contribute
நல்லதோர் வீணை
![]() | |
![]() |
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
Bharathi's "Nalathor Veenai" is translated into following languages. You may not get exact feel as this is done by Google translation tool. Feel free to give correct translation. Now, Enjoy ! |
|
Friday, April 10, 2009 | Labels: ♫ இசையோடு.. , Translated , தெய்வப் பாடல்கள் , தோத்திரப் பாடல்கள் | 1 Comments || Add comments and contribute
![]() |
பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | |
நன்றி:http://singgingg.blogspot.com |
பாரதி பிரியர்கள்..
- ♫ இசையோடு..
- Translated
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- சுதந்திரம்
- ஞானப் பாடல்கள்
- தமிழ் நாடு
- தனிப் பாடல்கள்
- தெய்வப் பாடல்கள்
- தேசிய இயக்கப் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
- தோத்திரப் பாடல்கள்
- பலவகைப் பாடல்கள்
- பாரத நாடு
- பாரதி குறித்து..
- பாரதி வாழ்க்கை
- புதிய பாடல்கள்
- பொருளடக்கம்
- முப்பெரும் பாடல்கள்
- வாழ்க்கை குறிப்பு
Know about Bharathi...


பாரதி பிரியர்கள் கூறியவை... | ![]() |


-
தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading -
நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! Translated
Continue Reading -
கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..
Continue Reading
