Know about Subramanya Bharathi!
Home > முப்பெரும் பாடல்கள் > 1. குயில்
1. குயில்
Apr
11

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
5
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,
நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; -
அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே,
10
வேடர் வாராத விருந்துத் திருநாளில்,
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்
15
காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்,
20
இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை
முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்
பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே - கண்டேன் யான்.
கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர்
25
இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்,
"மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாரோதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?"
30
என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்.
அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ?
குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்;
35
விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்!
Subscribe to:
Post Comments (Atom)
![]() |
பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | |
நன்றி:http://singgingg.blogspot.com |
பாரதி பிரியர்கள்..
- பாரதியார் - பாரதி யார்?
- பாரதி அறுபத்தாறு
- தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
- வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று
- நாம் என்ன செய்வோம்
- நடிப்பு சுதேசிகள்
- பாரத தேவியின் அடிமை
- நம்ம ஜாதிக் கடுக்குமோ
- தொண்டு செய்யும் அடிமை
- கோக்கலே சாமியார் பாடல்
- சத்ரபதி சிவாஜி
- விநாயகர் நான்மணி மாலை
- பாரதி கவிதைகள் - பொருளடக்கம்
- சுதந்திரப் பள்ளு
- விடுதலை
- ♫ இசையோடு..
- Translated
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- சுதந்திரம்
- ஞானப் பாடல்கள்
- தமிழ் நாடு
- தனிப் பாடல்கள்
- தெய்வப் பாடல்கள்
- தேசிய இயக்கப் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
- தோத்திரப் பாடல்கள்
- பலவகைப் பாடல்கள்
- பாரத நாடு
- பாரதி குறித்து..
- பாரதி வாழ்க்கை
- புதிய பாடல்கள்
- பொருளடக்கம்
- முப்பெரும் பாடல்கள்
- வாழ்க்கை குறிப்பு
Know about Bharathi...


பாரதி பிரியர்கள் கூறியவை... | ![]() |


-
தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading -
நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! Translated
Continue Reading -
கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..
Continue Reading

1 comments:
தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
My translation for this:
Did you think I too will
Spend my days in
search of food,
Tell petty tales,
Worry myself with thoughts,
Hurt others by my acts,
Turn senile with grey hair
And end up as fodder to the
relentless march of time
As yet another faceless man?
Post a Comment