Know about Subramanya Bharathi!
Home > தோத்திரப் பாடல்கள் > நந்த லாலா (காக்கைச் சிறகினிலே)
நந்த லாலா (காக்கைச் சிறகினிலே)
Apr
03

![]() |
ராகம் - யதுகுல காம்போதி : தாளம் - ஆதி
காக்கைச் சிறகினிலே நந்த லாலா ! - நின்றன்
கரியநிறந் தோன்று தையே, நந்த லாலா !
பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா ! - நின்றன்
பச்சை நிறந் தோன்று தையே, நந்த லாலா !
கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா - நின்றன்
கீத மிசைக்குதடா, நந்த லாலா !
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா ! - நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா !
பாரதியார் கடயத்தில் இருந்த போது, மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் பஜனைக் கோஷ்டியினர் வீதியழியாக பாடிச் செல்வர். ஒரே பாடலையே தினமும் அவர்கள் படிப்பதை பாரதியார் கவனித்தார்.
இதனால் சலிப்படைந்த பாரதியார் "நான் புதுப் பாட்டுச் சொல்லித் தருகின்றேன், நீங்கள் படியுங்கள்" என்று சொல்லி "காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன் காரியமுகம் தோன்றுதையா நந்தலாலா" என்ற பாடலைச் சொல்லிக் கொடுத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
![]() |
பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | |
நன்றி:http://singgingg.blogspot.com |
பாரதி பிரியர்கள்..
- பாரதியார் - பாரதி யார்?
- பாரதி அறுபத்தாறு
- தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
- வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று
- நாம் என்ன செய்வோம்
- நடிப்பு சுதேசிகள்
- பாரத தேவியின் அடிமை
- நம்ம ஜாதிக் கடுக்குமோ
- தொண்டு செய்யும் அடிமை
- கோக்கலே சாமியார் பாடல்
- சத்ரபதி சிவாஜி
- விநாயகர் நான்மணி மாலை
- பாரதி கவிதைகள் - பொருளடக்கம்
- சுதந்திரப் பள்ளு
- விடுதலை
- ♫ இசையோடு..
- Translated
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- சுதந்திரம்
- ஞானப் பாடல்கள்
- தமிழ் நாடு
- தனிப் பாடல்கள்
- தெய்வப் பாடல்கள்
- தேசிய இயக்கப் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
- தோத்திரப் பாடல்கள்
- பலவகைப் பாடல்கள்
- பாரத நாடு
- பாரதி குறித்து..
- பாரதி வாழ்க்கை
- புதிய பாடல்கள்
- பொருளடக்கம்
- முப்பெரும் பாடல்கள்
- வாழ்க்கை குறிப்பு
Know about Bharathi...


பாரதி பிரியர்கள் கூறியவை... | ![]() |


-
தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading -
நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! Translated
Continue Reading -
கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..
Continue Reading

3 comments:
Its really the greatest job to organise the poems...Thanks for giving us the oppportunity to taste the sweetness of tamizh and the thoughts of bharathi.....
"கேட்கு மொளி" என்று இருக்க வேண்டும் அன்பரே.
தங்களின் பாரதி பற்றிய பதிவுகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றன.
கேட்கு மொலியிலெல்லாம் என்பது சரிதான்
Post a Comment