மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
enbharathi-crome-extension
மகிழ்ச்சியான செய்தி!

பாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது!
Know about Subramanya Bharathi!
Add to Google
என் பாரதி, எனக்குப் போதும் !
enbharathi-crome-extension

கண்ணன் - என் காதலன், பாங்கியைத் தூது விடுத்தல்



பாரதியின் கவிதைகள் : கண்ணன் பாட்டு : கண்ணன் - என் காதலன், பாங்கியைத் தூது விடுத்தல்




கண்ணன் - என் காதலன் - (வேறு)
(பாங்கியைத் தூது விடுத்தல்)

தங்கப் பாட்டு மெட்டு
ரஸங்கள் : சிருங்காரம், ரெளத்ரம்


கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
அடி தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் ;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே - தங்கம்.
1
கன்னிகை யாயிருந்து தங்கமே - நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம் ;
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் - என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம்.
2
சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே - எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம் ;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான் ? - அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ !
3
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே - கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்.
4
ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் - எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.
5
சோர மிழைத்திடையர் பெண்களுடனே - அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ !
6
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம் ;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே.
7
நேர முழுதிலுமப் பாவி தன்னையே - உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் ;
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம் !
8

1 comments:

Sethu Subramanian said...

Please read my article on this song at the URL
http://periscope-narada.blogspot.com/2014/09/kannan-mananilaiyait-tangame-tangam.html

Post a Comment

பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.
பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.
En Bharathi
நன்றி:http://singgingg.blogspot.com
.

பாரதி பிரியர்கள்..

enbharathi-crome-extension

பாரதி படித்தோர் எண்ணிக்கை:
பாரதி பிரியர்கள் கூறியவை...

உங்கள் iGoogle-ல், என் பாரதி


Add to Google

இணைப்பு கொடுக்க

Read Bharathi Kavithaigal with songs and translation!பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்!


EnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.





பாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:


  • தேடிச் சோறு நிதந்தின்று

    தேடிச் சோறு நிதந்தின்று

    தேடிச் சோறு நிதந்தின்று-பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
    வாடித் துன்பமிக உழன்று-பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து- நரை
    கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
    வேடிக்கை மனிதரைப் போலே-நான்
    வீழ்வேனென்று நினைத்தாயோ?
    Translated Continue Reading
  • நல்லதோர் வீணை

    நல்லதோர் வீணை

    நல்லதோர் வீணைசெய்தே - அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி, சிவசக்தி; - எனைச்
    சுடர்மிகும் அறிவுடன்
                  படைத்துவிட்டாய்,
    வல்லமை தாராயோ, - இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
    சொல்லடி, சிவசக்தி!
    
    Translated
    
    Continue Reading
  • கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

    கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

    தீராத விளையாட்டுப் பிள்ளை 
                               - கண்ணன்
    தெருவிலே பெண்களுக் கோயாத 
                       தொல்லை. (தீராத)
    
    1. தின்னப் பழங்கொண்டு தருவான்; 
                                - பாதி
    தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
    என்னப்பன் என்னையன் என்றால்..
    Continue Reading