Know about Subramanya Bharathi!
Home > தெய்வப் பாடல்கள் > 10. அறிவே தெய்வம்
10. அறிவே தெய்வம்
தெய்வப் பாடல்கள்
ஞானப் பாடல்கள்
அறிவே தெய்வம்
கண்ணிகள்
ஞானப் பாடல்கள்
அறிவே தெய்வம்
கண்ணிகள்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் ! - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ ?
1
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் ! - எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ ?
2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ ? - பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ ?
3
வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.
4
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.
5
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே - உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.
6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம் - நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ ?
7
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ ?
8
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ ?
9
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.
10
Friday, May 01, 2009
|
Labels:
ஞானப் பாடல்கள்
,
தெய்வப் பாடல்கள்
|
Subscribe to:
Post Comments (Atom)
பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன. |
|
நன்றி:http://singgingg.blogspot.com |
பாரதி பிரியர்கள்..
- ♫ இசையோடு..
- Translated
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- சுதந்திரம்
- ஞானப் பாடல்கள்
- தமிழ் நாடு
- தனிப் பாடல்கள்
- தெய்வப் பாடல்கள்
- தேசிய இயக்கப் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
- தோத்திரப் பாடல்கள்
- பலவகைப் பாடல்கள்
- பாரத நாடு
- பாரதி குறித்து..
- பாரதி வாழ்க்கை
- புதிய பாடல்கள்
- பொருளடக்கம்
- முப்பெரும் பாடல்கள்
- வாழ்க்கை குறிப்பு
Know about Bharathi...
பாரதி படித்தோர் எண்ணிக்கை:
பாரதி பிரியர்கள் கூறியவை... |
-
தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading -
நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! Translated
Continue Reading -
கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..
Continue Reading
1 comments:
தெய்வத்தை பற்றி வரும் பாரதியின் அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் இதுவும் ஒன்று. Thank you for posting it in a nicely formatted way. And your website's L&F is awesome. Keep rocking...
Post a Comment