Know about Subramanya Bharathi!
ஜய பாரத !
Dec
12
ஏழ்மை கொண்ட போழ்தினும்
அறந்த விர்க்கி லாது நிற்கும்
அன்னை வெற்றி கொள்கவே!
சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள் மறந்த விர்ந்த் நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும் இறந்து மாண்பு தீர மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும் அறந்த விர்க்கி லாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே! நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேய வாணர்கள் தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும் மாறு கொண்டு கல்லி தேய வண்ணி தீர்ந்த நாளினும் ஈறு நிற்கும் உண்மை யொன்று இறைஞ்சி நிற்பவள் வாழ்கவே! வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளும் மாயவே வெல்லுஞானம் விஞ்சி யோர்செய் மெய்மை நூல்கள் தேயவும் சொல்லும் இவ் வனைத்தும் வேறு சூழ நன்மை யுந்தர வல்ல நூல் கெடாது காப்பள் வாழி அன்னை வாழியே! தேவ ருண்ணும் நன்ம ருந்து சேர்ந்த கும்பம் என்னவும் மேவுவார் கடற்கண் உள்ள வெள்ள நீரை ஒப்பவும் பாவ நெஞ்சினோர் நிதம் பறித்தல் செய்வ ராயினும் ஓவி லாதசெல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே! இதந்தரும் தொழில்கள் செய்து இரும்பு விக்கு நல்கினள் பதந்தரற் குரிய வாய பன்ம தங்கள் நாட்டினள் விதம்பெறும்பல் நாடி னர்க்கு வேறொ ருண்மை தோற்றவே சுதந்திரத்தி லாசை இன்று தோற்றி னாள்மன் வாழ்கவே!
Subscribe to:
Post Comments (Atom)
![]() |
பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | |
நன்றி:http://singgingg.blogspot.com |
பாரதி பிரியர்கள்..
- பாரதியார் - பாரதி யார்?
- பாரதி அறுபத்தாறு
- தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
- வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று
- நாம் என்ன செய்வோம்
- நடிப்பு சுதேசிகள்
- பாரத தேவியின் அடிமை
- நம்ம ஜாதிக் கடுக்குமோ
- தொண்டு செய்யும் அடிமை
- கோக்கலே சாமியார் பாடல்
- சத்ரபதி சிவாஜி
- விநாயகர் நான்மணி மாலை
- பாரதி கவிதைகள் - பொருளடக்கம்
- சுதந்திரப் பள்ளு
- விடுதலை
- ♫ இசையோடு..
- Translated
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- சுதந்திரம்
- ஞானப் பாடல்கள்
- தமிழ் நாடு
- தனிப் பாடல்கள்
- தெய்வப் பாடல்கள்
- தேசிய இயக்கப் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
- தோத்திரப் பாடல்கள்
- பலவகைப் பாடல்கள்
- பாரத நாடு
- பாரதி குறித்து..
- பாரதி வாழ்க்கை
- புதிய பாடல்கள்
- பொருளடக்கம்
- முப்பெரும் பாடல்கள்
- வாழ்க்கை குறிப்பு
Know about Bharathi...


பாரதி பிரியர்கள் கூறியவை... | ![]() |


-
தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading -
நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! Translated
Continue Reading -
கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..
Continue Reading

0 comments:
Post a Comment